தொடரும் மாணவர்களின் கொரோனோ தொற்று - பள்ளி திறக்கும் தி.மு.க அரசின் முடிவு தோல்வியா?

DMK Fails.

Update: 2021-09-04 14:15 GMT

தமிழகத்தில் அடுத்தடுத்து ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து பள்ளிகல்வித்துறையின் மோசமான செயல்பாடுகள் காரணமா என சந்தேகம் கொள்ள வைத்துள்ளது.

கொரோனோ இரண்டாம் அலை தொற்று குறைந்துவிட்டது என தி.மு.க அரசு காரணம் காட்டி கடந்த செப்டம்பர் 1'ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை 9'ம் வகுப்பு முதல் 12'ம் வகுப்பு வரை திறக்க அனுமதியளித்தது, கொரோனோ முற்றிலும் குறையாத நிலையில் இது தேவையற்றது என பல தரப்பில் இருந்தும் கருத்துக்கள் வந்த நிலையில் அதனை காது கொடுத்து கேட்காத தி.மு.க அரசு பள்ளிகளை திறந்தது.

இதனையடுத்து பள்ளிகள் திறந்த இந்த நான்கு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கும், அரியலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நெய்வேலி என்.எல்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் 2 பெண் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளிகல்விதுறையின் முடிவுகள் பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் தோல்வியடைந்துள்ளன.


Source - Asianet NEWS

Tags:    

Similar News