கூட்டணியில் விரிசல்? தனியாக போட்டியிடும் காங்கிரஸ்.!
கூட்டணியில் விரிசல்? தனியாக போட்டியிடும் காங்கிரஸ்.!
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், இடைத் தேர்தல் முடிவும் வந்து காங்கிரஸிற்கு அதிர்ச்சி அளித்தது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்த சிவசேனா, பா.ஜ.கவை விட மிக குறைவான, கிட்டத்தட்ட பாதி அளவு இடங்களை பெற்ற வெற்றி பெற்ற பிறகு, உத்தவ் தாக்கரே முதல்வராக வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல ஆண்டுகால பா.ஜ.க கூட்டணியை உதறித்தள்ளிவிட்டு எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் (NCP) மற்றும் காங்கிரஸுடன் முற்றிலும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து அதற்கு மகா விகாஸ் அகாதி (MVB) எனப் பெயர் வைத்தது.
உத்தவ் தாக்கரே ஆட்சி பொறுப்பேற்ற தினத்திலிருந்து கொரானா வைரஸ், சுஷாந்த் சிங் மரணம், அர்னாப் கோஸ்வாமி கைது என பிரச்சனை மேல் பிரச்சனைகளை அனுபவமில்லாத உத்தவ் தாக்கரே அரசாங்கத்தால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு மின் கட்டணத்தில் சலுகையை வழங்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை சிவசேனா நிராகரித்தது கூட்டணிக் கட்சியான காங்கிரசில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதித்துறைக்கு பலமுறை இத்திட்டத்தினை அனுப்பிவைத்தும் அவர்கள் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இதைக் காரணமாகக் காட்டி அம்மாநிலத்தில் உள்ள ஒரே எதிர்க்கட்சியான பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் 2022 வருட ஆரம்பத்தில் நடைபெற உள்ளன. இதில் சிவசேனா வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனியாக நிற்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தேவையற்ற கருத்துக்களை பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதற்கு பெயர் போனவர். அவர் அங்கு மகா விகாஸ் அகாதி அடுத்த 25 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சி புரியும் என கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.