மதுரை: கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துவிட்டது! காவல் ஆணையரிடம் மனு அளித்த செல்லூர் ராஜூ!
மதுரையில் ரவுடிகளுக்குத் துணிச்சல் அதிகரித்திருப்பதாகவும், இங்கு அதிகரிக்கும் குற்றச் செயல்கள் போக்குவரத்து நெரிசல்களைத் தடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மதுரையில் ரவுடிகளுக்குத் துணிச்சல் அதிகரித்திருப்பதாகவும், இங்கு அதிகரிக்கும் குற்றச் செயல்கள் போக்குவரத்து நெரிசல்களைத் தடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக செல்லூர் கே.ராஜூ இன்று காவல் ஆணையரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை நகரில் சமீபகாலமாக வழிப்பறி, கொள்ளை, திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு முன்னர் எடுத்த நடவடிக்கையைப் போன்று ஆங்காங்கே புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும். சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும்.
மேலும், கீரைத்துறை காவல் நிலையம் வில்லாபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கீரைத்துறை பகுதிக்கென்று புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிக்க வேண்டும். மதுரையில் மீண்டும் அமைதி நகரமாக மாற்ற வேண்டும். அதே போன்று தொடர்ந்து நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே முக்கியச் சாலையின் வழியாக விரைவாகச் செல்ல முடியவில்லை. குறுகிய இடங்களில் தடுப்பு வேலி போடப்பட்டுள்ளதால் ஏற்படுகின்ற வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கிக்கொள்வதால் நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடிவதில்லை. சுற்றுலா மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் வாகனங்கள் சரியான நேரத்திற்குச் செல்ல முடிவதில்லை. இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: hindu tamil
Image Courtesy:Dhinasari
https://www.hindutamil.in/news/tamilnadu/723584-in-madurai-the-rowdies-are-brave-increase-in-crime-petition-to-sellur-raju-police-commissioner.html