கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை இந்திய அரசு அனுமதிப்பது தொடர்பான பிரதமர் மோடியின் முடிவு என்ன என்பது தொடர்பான கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆர்.பி.ஐ, நிதியமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் செய்துள்ள முதலீட்டு அளவுகள், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் பார்வை ஆகியவை தற்போது கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் கிரிப்டோகரன்சியை ஏற்ற நாடுகள், ஏற்காத நாடுகள் ஆகியவற்றின் பார்வைகள், நடைமுறைகள் விரிவாக பார்க்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் முக்கியமாக கட்டுப்பாடற்ற கிரிப்டோ மார்க்கெட் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான வழிகளாக மாற அனுமதிக்க முடியாது என்றும் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது, எனவே அரசாங்கம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை உன்னிப்பாகக் கண்காணித்து செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கும். இந்தத் துறையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் முற்போக்கானதாகவும், முன்னோக்கிப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்து இருந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் கிரிப்டோகரன்சி தொடர்பாக நிதித்துறை வல்லுநர்கள், கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, இதுதொடர்பான இறுதி சட்டவரைவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.
Image source - Republic World