ஆபாச பேச்சு.. தயாநிதி, லியோனி மீது பாய்ந்த வழக்கு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் குறித்து திமுக எம்.பி ராசா ஆபாச வார்த்தையால் பேசினார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றவர்கள் மீது அவதூறான கருத்துக்களை கூறி வருகின்றனர். அது போன்று திமுகவில் உள்ள ராசா, தயாநிதிமாறன், லியோனி உள்ளிட்டவர்கள் மிகவும் ஆபாசமான முறையில் பேசி வந்தனர்.
அண்மையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் குறித்து திமுக எம்.பி ராசா ஆபாச வார்த்தையால் பேசினார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் லியோனி பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரை தொடர்ந்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி குறித்து அவதூறான பேச்சை திமுகவினர் மத்தியில் பேசினார். அவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், திமுக எம்பிக்கள் ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் லியோனி மீது ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.