ஸ்டாலினுக்கு கெடு! மதுரையை கலக்கும் மு.க.அழகிரியின் போஸ்டர்!
ஸ்டாலினுக்கு கெடு! மதுரையை கலக்கும் மு.க.அழகிரியின் போஸ்டர்!
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை முழுவதும் பரபரப்பான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மகனும் தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி அக்கட்சியிலிந்து நீக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் கருணாநிதி மறைந்த பின்னரும் அழகிரி கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் தொடங்கும் சில மாதங்களுக்கு முன்னரே மு.க.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
தன்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் திமுகவுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும், அப்படி இல்லை என்றால் தனிக்கட்சி தொடங்கப்படும் என அழகிரி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே அழகிரி பிறந்தநாள் வருகின்ற 30ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில், ‘சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம்’ என வாசகங்கள் இடம் பெற செய்துள்ளனர். மேலும், தி.மு.க. ஆட்சி அமைக்க ஐ -பேக் தேவையில்லை, கருணாநிதியின் மூளையான மு.கஅழகிரி மட்டும் போதும் என்று என போஸ்டர்கள் ஒட்டி தி.மு.க.வை மிரள வைத்துள்ளனர்.