முதலமைச்சர் மீது அவதூறு பேச்சு.. உதயநிதி மீது பாய்ந்த வழக்கு.!

முதலமைச்சர் மீது அவதூறு பேச்சு.. உதயநிதி மீது பாய்ந்த வழக்கு.!

Update: 2021-01-12 17:45 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறான வகையில் பேசியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தறையில் ஊர்ந்து முதலமைச்சர் பதவியை பிடித்தார். மேலும், சசிகலா காலை பிடித்தார் என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

இந்த பேச்சுக்கள் பெண்கள் மத்தியில் முகம் சுழிக்கும் அளவிற்கு இருந்தது. இதனால் அவருக்கு அதிமுக மற்றும் பாஜக, அமமுக கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அவதூறாகப் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் புகார் அளித்திருந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News