குஷ்பு குறித்த அவதூறு பேச்சு: கைதான தி.மு.க பேச்சாளர் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை கோர்ட் உத்தரவு
நடிகை குஷ்பு குறித்து அநாகரிகமான முறையில் பேசியதால் கைதான தி.மு.க பேச்சாளர் ஜாமீன் கோரிய மனுவை சென்னை கோர்ட் தள்ளுபடி செய்தது.;
கவர்னர் ஆர்.என்.ரவி நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அநாகரீகமாக பேசிய தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கடந்த பதினெட்டாம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது ஜாமின் மனுவை எழும்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்' பொதுக்கூட்டங்களில் அரசியல் பிரச்சனைகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். அது போன்ற நேரங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில நகைச்சுவைகளை கூறுவேன் . இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எனவே பேச்சு இருதரப்பின் இடையே பிரச்சினை ஏற்படுத்த வகையிலோ யாரையும் இழிவுபடுத்தும் வகையிலோ இல்லை . சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நான் பேசியது இரண்டு நாட்களுக்கு முன்பு சப் இன்ஸ்பெக்டரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி , 'சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
SOURCE:DAILY THANTHI