சிதம்பரம்: பா.ஜ.க. எதிர்ப்பை தொடர்ந்து 2 கோயிலை இடிக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்ட அரசு!
சிதம்பரத்தில் கோயில்களை இடித்து அப்புறப்படுத்தக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக அரசு கைவிட்டுள்ளது.
சிதம்பரத்தில் கோயில்களை இடித்து அப்புறப்படுத்தக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக அரசு கைவிட்டுள்ளது.
சிதம்பரம் கீழ் வீதியில், வீர சக்தி ஆஞ்சநேயர் கோயில் மற்றும் தான் தோன்றி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் சாலை விரிவாக்கம் காரணமாக நீதிமன்றத்தில் இடிப்பதற்கு அனுமதி வாங்கியது. இதனையடுத்து கோயிலை இடிப்பதற்கான நோட்டீஸை கோயில் நிர்வாகத்தினருடன் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இது பற்றிய தகவல்களை அறிந்த பாஜகவினர், இந்து முன்னணியினர், அகில பாரத இந்து மகா சபா, விஷ்வ இந்து பரிஷத் நேற்று (நவம்பர் 16) உள்ளிட்ட இயக்கங்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயிலை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. அதற்காக பாஜக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் சிதம்பரம் நகரத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பாதிப்பு வந்துவிடும் என்ற பயத்தில் அரசு கோயிலை இடிக்கும் பணியை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் வட்டம், சிதம்பரம் கீழ் ரதவீதியில் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் தான் தோன்றி விநாயகர் ஆலயம் இரண்டையும் 17.11.2021 அன்று அகற்றுவதாக நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக, விஷ்வ இந்து பர்ஷித், இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிதம்பரம் பொதுமக்கள் தலைமையில் 16.11.2021 மற்றும் 17.11.2021 இரண்டு நாட்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.