சட்டமன்ற தேர்தலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு.!
அதிமுகவில் போட்டியிடும் 171 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் போட்டியிடும் 171 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டது. அதில் 30 பேரில் 27 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கதர் துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகிய மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.