நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட 27 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு!
நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் உட்பட மொத்தம் ஒன்பது மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வாகிய நிலையில், முதல் கட்டமாக இன்று 27 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட நான்கு பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்
மேலும், தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.தர்மர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அவர் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா வாழ்க என்ற கோஷத்துடன் தனது உரையை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai