தினகரனும், சசிகலாவும் தி.மு.க.வின் ‘B’ டீம்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.!
தினகரனும், சசிகலாவும் தி.மு.க.வின் ‘B’ டீம்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.!;
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், சசிகலா இன்று தமிழகம் திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவும், அமமுகவும் ஒரு போதும் இணையாது. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது 100 சதவீதம் கிடையாது என்றார்.
மேலும், சசிகலா, தினகரன் இருவரும் திமுகவின் பீ டீமா செயல்படுகின்றனர். இதற்கு சாட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மினி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அவர்கள் இரட்டை இலைக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி தங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தனர்.
எனவே அந்த தேர்தலில் அதிமுக தோற்க வேண்டும் என்பது தினகரன் மற்றும் சசிகலாவின் குறிக்கோளாக இருந்தது. இதன் காரணமாகத்தான் நான் அவர்களை திமுகவின் பீ டீம் என்று தெரிவித்தேன்.