தஞ்சாவூர்: தி.மு.க. கூட்டுறவு சங்கத் தலைவர் மீது 16 பேர் மோசடி புகார்!

தஞ்சாவூரில் திமுக கூட்டுறவு சங்கத் தலைவர் மீது அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு இயக்குநர்கள் 16 பேர் மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-26 06:00 GMT

தஞ்சாவூரில் திமுக கூட்டுறவு சங்கத் தலைவர் மீது அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு இயக்குநர்கள் 16 பேர் மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவராக வி.பண்டரிநாதன் உள்ளார். இந்நிலையில், இவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் தமிழ் நங்கையிடம் அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இயக்குநர்கள் 16 பேர் கையெழுத்திட்ட புகார் மனு நேற்று அளிக்கப்பட்டது.

இந்த மனுவை தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் துரை திருநானம் தலைமையில் அதிமுக பகுதிச் செயலாளர்கள் அறிவுடை நம்பி மற்றும் புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் உள்ளிட்டோர்கள் வழங்கினர். அவர்கள் வழங்கி மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் பண்டரிநாதன் பணி நியமனம் மற்றும் நிதி முறைகேடு, ஆவணங்களை திருத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மேலும் இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாக தீர்மானங்களை எழுதி கையெழுத்து வாங்கி, தனக்கு வேண்டியது போன்று மாற்றிக்கொள்கிறார்.

தினக்கூலி வேலைக்கு ஆட்கள் எடுக்காமல் தனக்கு வேண்டியர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்து அந்த சம்பளத்தையும் அவரே எடுத்துக்கொள்கிறார். எனவே பண்டரிநாதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக பிரமுகர் மீது மோசடி புகார் அளித்துள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Hindu Tamil


Tags:    

Similar News