100 சதவீத வாக்களிக்க இருசக்கர வாகன பிரச்சாரத்தை துவக்கிய மாவட்ட ஆட்சியர்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்களார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்களார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.
அதன்படி திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.சாந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் பேசியதாவது: நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். மாவட்டத்தில் அனைவரும் வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை விற்காமல் நேர்மையான முறையில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.