சசிகலாவுக்கு எதிராக மாவட்டம் தோறும் அ.தி.மு.க. கூட்டங்களில் தீர்மானம்.!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் அவ்வப்போது செல்போன் மூலமாக பேசி வருகிறார். கட்சியை விரைவில் கைப்பற்றுவேன் எனவும் அந்த ஆடியோ மூலமாக கூறிவருகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் அவ்வப்போது செல்போன் மூலமாக பேசி வருகிறார். கட்சியை விரைவில் கைப்பற்றுவேன் எனவும் அந்த ஆடியோ மூலமாக கூறிவருகிறார்.
மேலும், அந்த உரையாடலை செய்தி சேனல்களுக்கு அனுப்பி அதனை வெளியிட்டு வருவதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா எப்படி கட்சியை சொந்தம் கொண்டாட முடியும் என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அடிக்கடி பேட்டியின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசிய 18 பேரை அதிரடியாக கட்சியில் இருந்து அதிமுக தலைமை தூக்கியது. மேலும் கட்சி குறித்து சசிகலா பேசக்கூடாது என்று மாவட்டம்தோறும் தீர்மானம் நிரைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தீர்மானத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கட்சி குறித்து சசிகலா சொந்தம் கொண்டாடக்கூடாது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது.