மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து.!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிதாக மத்திய கேபினட் மற்றும் இணை அமைச்சர்களாக 43 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிதாக மத்திய கேபினட் மற்றும் இணை அமைச்சர்களாக 43 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதே போன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறையும் அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், மத்திய அமைச்சராக பதவியேற்ற தமிழக பாஜக தலைவர் திரு. எல்.முருகன் அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. எல்.முருகன் அவர்கள், தமிழகத்திற்கு வேண்டிய அனைத்து நலன்களையும் மத்திய அரசிடம் கேட்டு பெற்று தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.