தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக பார்த்து வருகிறது.

Update: 2021-03-10 13:14 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக பார்த்து வருகிறது.

அதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சின்னம் வழங்கும் பணியை முதற்கட்டமாக செய்து வருகிறது. அதன்படி தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடுவதற்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் அக்கட்சி மகிழ்ச்சியடைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது கமல் அல்லது தினகரனுடன் கூட்டணி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News