கூட்டணி குறித்து தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா அவசர ஆலோசனை.!

அதிமுக அமைச்சர்கள் தேமுதிகவுடன் கடந்த 2 நாட்களாக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

Update: 2021-03-01 09:34 GMT


அதிமுக அமைச்சர்கள் தேமுதிகவுடன் கடந்த 2 நாட்களாக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.


 



இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தேமுதிக தனித்து போட்டியிடுவதற்கு நிர்வாகிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால்தான் நாம் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் தோல்வியை தழுவ வேண்டும் எனவும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவுடன் நடத்திய தொகுதி பங்கீட்டில் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோருடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார்.

யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்று ஆலோசனைக்கு பின்னர்தான் தெரியவரும். அதிமுகவா அல்லது, 3வது அணி அமைத்து போட்டியிடுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Similar News