கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க.தான் - பா.ஜ.க. குற்றச்சாட்டு!

Update: 2022-07-10 06:47 GMT

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு எப்போதுமே எதிரான கட்சியாக தி.மு.க., உள்ளது என்று பா.ஜ.க., சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை அணி நிர்வாகிகளை நியமனம் செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம், ஓசூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறுபான்மை அணியின் மாநில தலைவர் டெய்சி பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க., சிறுபான்மை என்கின்ற ஒரே வார்த்தையில் அரசியல் செய்து வருகிறது. மேலும், பா.ஜ.க., கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி இல்லை. அதற்கு மாற்றாக தி.மு.க., தான் எதிரான கட்சியாக செயல்பட்டு வருகிறது. சிலர் பா.ஜ.க.வில் இணைந்தால் தெய்வ குற்றம் போன்று பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News