'அண்ணாத்த' படத்தின் 75 சதவிகித லாபத்தை தர வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' !
உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட்' மூவீஸ் 'அண்ணாத்த படத்தின் 75 சதவிகித லாபதத்தை தர வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுவது பரபரப்பாக பேசப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 'அண்ணாத்த' படத்தின் விநியோக உரிமையை 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் வாங்கியிருக்கிறது. தீபாவளியன்று படத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின்றன. முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினின் செந்தமானது இந்த 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்'.
இந்நிலையில் இது போன்ற விநியோக உரிமை கடந்த காலங்களில் வழங்கப்பட்டபோது, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பும், விநியோகஸ்தர் தரப்பும் சரிபாதியாக லாபத்தைப் பிரித்துக்கொள்வதுதான் முறையாக இருந்து வந்துள்ளது. ஆனால் 'அண்ணாத்த' படத்துக்கான விநியோக உரிமையை வாங்கியிருக்கும் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம், லாபத்தில் 75 சதவிகிதம் பங்கு கேட்கிறதாம். 25 சதவிகிதம்தான் தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும். இதுவரையில் இது போன்ற நடைமுறை இல்லை என்கிறது தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பு.
ஏற்கனவே திரைத்துறையின் கட்டுப்பாடு தி.மு.க கையில் என்ற நிலை இருக்கும் போது இது போன்ற செயல்பாடுகளால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.