ஆளுநர் மாளிகையில் உளவு பார்க்க ஆளை நியமித்த தி.மு.க - கொத்தாக தட்டி தூக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - திடுக்கிடும் தகவல்கள்

ஆளுநர் மாளிகையை தி.மு.க அரசு வேவு பார்த்த விவகாரம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-01-19 03:09 GMT

ஆளுநர் மாளிகையை தி.மு.க அரசு வேவு பார்த்த விவகாரம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்தே ஆளும் தி.மு.க அரசிற்கும் ஆளுநருக்கு இடையில் அவ்வப்போது கருத்து மோதல் வெடித்து வருகின்றது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றி விழாக்களில் பேசுவதும், தமிழகத்தின் பிரிவினைவாதிகள் பற்றிய விவரங்களை திரட்டுவதும் தனது வேலைகளில் மும்முரமாக இருப்பதால் தி.மு.க அதனை பொறுக்க முடியாமல் தனது கூட்டணி கட்சிகளை வைத்து எதிர்கருத்துக்களை பரப்பி வருவதையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை உரையாற்ற தி.மு.க அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆளுநருக்கு தயாரித்து கொடுத்த உரையில் தி.மு.க அரசை புகழ்ந்து நிறைய வார்த்தைகள் இருந்த காரணத்தினால் அதனை என்னால் படிக்க முடியாது என ஆளுநர் அந்த வார்த்தைகளை தவிர்த்தார். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஆஹா! ஓஹோ! என இருக்கிறது என தி.மு.க அரசு கூறியதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவே இல்லை!

இந்த நிலையில் ஆளுநர் வரிகளை தவிர்த்தது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் உரை வாசித்துக் கொண்டிருக்கும் போதே சட்டசபையை விட்டு வெளியேறார், உடனே திமுக அரசு ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. அன்று முழுவதும் சமூக வலைதளங்களில் தி.மு.க ஐடி விங் பிரிவை சேர்ந்தவர்கள் 'கெட் அவுட் ரவி' என ட்ரெண்டிங் செய்தார்கள். மேலும் அன்று இரவே தி.மு.க தரப்பில் 'கேட் அவுட்ரவி' என போஸ்டர் அடித்து சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.

இதனால் ஆளுநர் தரப்பு உடனடியாக ஒரு அறிக்கை தயாரித்து உள்துறை அமைச்சகத்துக்கு இது தொடர்பான கருத்துக்களை அனுப்பியது, இந்த விவகாரம் நடந்த நான்காவது நாள் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லி சென்ற ஆளுநர் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும், தான் எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்தும் விவரித்ததாக தெரிவிக்கிறது.

மேலும் கடந்த சில நாட்களாக ஆளுநரை வேவு பார்க்கவும், ஆளுநரின் நடவடிக்கைகளை கண்காணித்து கூறவும் தி.மு.க அரசு ஒரு அதிகாரியை நியமித்திருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்பொழுது இந்த தகவலை சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இன்று தி.மு.க அரசு மீதும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மீதும் கோடிக்கணக்கில் வாரிசு, துணிவு படத்திற்காக அரசு விதிமுறைகளை மீறி அரசு இயந்திரம் செயல்பட்டது குறித்து சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தின் இயக்குனரிடம் புகார் அளிக்க சென்றார். அவர் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் வாங்க மறுத்தார் என கூறப்படுகிறது, புகாரை அளித்துவிட்டு வெளியில் வந்த சவுக்கு சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கையில், 'ஆளுநர் மாளிகையில் இணை இயக்குனர் ஒருவர் ஒருவரை தி.மு.க அரசு வேவு பார்க்க அனுப்பியதாகவும், அந்த வேறு பார்க்கும் விவகாரத்தை ஆளுநர் கண்டுபிடித்து அந்த இணை இயக்குனரிடம் தி.மு.க அரசு அதிகாரி யார் உளவுப்பக்க அனுப்பினார் என்ன விவகாரம் என கேட்டறிந்ததாகவும்! இது குறித்து நடவடிக்கை உடனடியாக எடுத்த காரணத்தினால் அந்த இணை இயக்குனர் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது மட்டுமல்லாமல் அமித்ஷாவை சந்தித்து நேரில் இந்த விவகாரத்தை விளக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே ஆளுநர் மற்றும் தி.மு.க அரசின் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில் ஆளுநர் மாளிகையில் அரசு அதிகாரி ஒருத்தரை ஆளுநருக்கு எதிராக உளவு பார்க்க தி.மு.க அரசு அனுப்பிய விவகாரம் தற்போது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் எனவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரே வாரத்தில் மேலும் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar News