முதல்வரை வரவேற்க ஒரு லட்சம் பேர்! திருவண்ணாமலை தீபத்திற்கு ஒருத்தரும் வரக்கூடாது - தி.மு.க'வின் தில்லாலங்கடி !
"கோவை குலுங்கியது என்கிற அளவுக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வேண்டும்" என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது பரபரப்பாகியுள்ளது.
நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலுக்கான, விருப்ப மனுவை வழங்குதல் தி.மு.க'வில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதையொட்டி கோவை தி.மு.க செயற்குழு நடந்தது. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் ஆகியோருடன் செந்தில் பாலாஜி மேடையில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "எந்த நேரத்திலும் நகர்ப்புற தேர்தல் அறிவிப்பு வரலாம். அதற்கு கோவை தயாராக இருக்க வேண்டும். புகார் மனுக்களுடன் யாரும் வரவேண்டாம். என்னிடம் புகார் கொடுக்க வருபவர்கள், அதற்கு முன்பு உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். எல்லோரையும் அரவணைத்து செல்வோம்.
22'ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். கோவை குலுங்கியது என்கிற அளவுக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு அவரை வரவேற்க வேண்டும். ஒரு பூத்துக்கு ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்படும். குறைந்தது 50 பேர் அதில் இருக்க வேண்டும். பூத் கமிட்டியை சேர்ந்தவர்கள் அந்த வாகனத்திலேயே வரவேண்டும்" என பேசியது மக்கள் மத்தியில் சர்சையை கிளம்பியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம், மயிலாடுதுறை தீர்த்த வாரி நிகழ்வு, கந்த ஷஷ்டி நிகழ்வு என எந்த ஒரு நிகழ்வையும் கொரோனோ'வை காரணம் காண்பித்து தி.மு.க அரசு மக்கள் அனுமதிக்கு மறுத்துவந்தது. ஆனால் தேர்தல் வந்ததும் ஓட்டிற்காக ஒரு லட்சம் பேர் கூட வேண்டும் என தி.மு.க அமைச்சர் அறிவித்துள்ளது சர்ச்சையை கிளம்பியுள்ளது. ஏன் இப்போது கொரோனோ பரவல் அச்சம் இல்லையா என மக்களே கேட்கும் அளவிற்கு அது பூதாகரமாக வெடித்துள்ளது.