பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகையை அபகரித்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் !
Kathir News.
பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகையை தி.மு.க'வினர் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க'தான் வென்றது. கோவையில் தி.மு.க'வுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிடினும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாகப் பல புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. டாஸ்மாக் கடைமுதல் கிடைக்கும் இடங்கள் எல்லாவற்றிலும் தி.மு.க'வினர் இடத்தை அபகரிப்பது முதல் பணத்தை சம்பாரிப்பது எப்படி என்றுதான் பார்க்கின்றனர் என கொங்கு மண்டல மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகையை தி.மு.க'வினர் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து பொள்ளாச்சி வாழ் பொதுமக்கள் கூறுகையில், 'கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக டாக்டர்.வரதராஜன் சமீபத்தில் பதவியேற்றார். அதன் பிறகு சில வாரங்களிலேயே கட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்காக விருந்தினர் மாளிகையைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்' என்கின்றனர்.
மேலும், 'அவரது கட்சிப் பணிக்காக ஒரு பெண்ணையும் பணியமர்த்தியுள்ளனர். அங்கு எப்போதும் தி.மு.க கரைவேட்டியே தென்படுகிறது. ஆரம்பத்தில் வரதராஜன் அவரது இல்லத்தில்தான் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வந்தார். தனிப்பட்டரீதியாக அவருக்கு அதில் அசௌகரியம் இருந்திருக்கிறது. உடனடியாக அரசு விருந்தினர் இல்லத்துக்கு வந்துவிட்டார்' என்றும் தெரிவிக்கின்றனர்.
கட்சி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் இங்குதான் நடக்கின்றன. இத்தனைக்கும் பொள்ளாச்சி நகர தி.மு.க'வினருக்கு தனி அலுவலகம் உள்ளது. தி.மு.க:வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர் என பிரகடனப்படுத்தியுள்ளனர்.
விடியல் வந்துவிட்டது என விளம்பரப்படுத்தும் தி.மு.க தலைமை இதற்கு அமைதி காப்பது ஏனோ? அரசு சொத்த தி.மு.க'வினர் அனுபவிப்பதை அனுமதிக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.