திருப்பூர்: குண்டடம் 9வது வார்டில் 13 கட்சி கூட்டணி இருந்தும் 'தி.மு.க. வேட்பாளர்' டெபாசிட் இழப்பு!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் பல இடங்களில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களிடம் திமுக டெபாசிட்டை இழந்து வருவதை பார்க்க முடிகிறது.

Update: 2022-02-22 05:47 GMT

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் பல இடங்களில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களிடம் திமுக டெபாசிட்டை இழந்து வருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம், குண்டடம் 9வது வார்டில் திமுக வேட்பாளர் 13 கட்சிகளுடன் போட்டியிட்டார். ஆனால் அவர் தற்போது டெபாசிட்டை இழந்துள்ளார்.

அங்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக உட்பட பல சுயேட்சைகளும் களம் கண்டனர். தற்போது ஆளுகின்ற கட்சியான திமுக வேட்பாளர் டெபாசிட்டை பறிக்கொடுத்துள்ள சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News