ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசு அதிகாரிகளை மிரட்டும் செந்தில் பாலாஜி!

Update: 2021-03-19 05:14 GMT

தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ளுவதற்கு எந்த தடையும் இருக்காது என்றும் அதைத் தடுக்கும் மணல் சுரங்க அதிகாரிகள் பதவியில் இருக்க மாட்டார்கள் என்றும் கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க, இந்த முறை ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இதன் வரிசையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ள விரும்புவோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தற்போது கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, " தமிழக முதல்வராக ஸ்டாலின் காலை 11.05 மணிக்கு பொறுப்பேற்றால், எந்த அதிகாரியும் உங்களை ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க மாட்டார்கள். நீங்கள் நிறுத்தப்பட்டால், என்னை அழைக்கவும், அந்த அதிகாரி இருக்க மாட்டார். " என மிரட்டும் தொனியில் பேசினார்.

ஏற்கனவே தி.மு.க பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் இருந்து, மறுபடியும் வந்தால் அராஜகம் தலை தூக்கும் என்ற மக்களின் பயத்துக்கு இது தீனி போடுவது போல் உள்ளது.

இந்த செய்தி, தேசிய ஆங்கில சானெல்கள் வரை சென்று விட்டது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் இது குறித்த விடியோவை பகிர்ந்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.


ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ளுவது விவசாயம் மற்றும் நீர்வளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும், தி.மு.க வேட்பாளரின் பேச்சு விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, ​​மணல் சுரங்க மாஃபியா காரணமாக கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத் தடுக்கும் பொருட்டு, அ.தி.மு.க அதிகாரத்திற்கு வந்தபோது, ​​ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தது. 


Reference: The Commune Mag

Tags:    

Similar News