"பணத்தை வாங்கிட்டு சீட்டு கொடுக்குறாங்க பா!" கொதிக்கும் கோவை தி.மு.க'வினர், தி.மு.க'வுல இதெல்லாம் சாதாரணமப்பா!

Update: 2022-02-04 07:59 GMT

கோயம்பத்தூர், நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் பணியில் தி.மு.க'வுக்கு சுணக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகங்களை அமைத்து களத்தில் இறங்கி விட்டனர்.

ஆனால் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மட்டுமே சலசலப்பு நீடித்து வருகிறது. "பல முக்கிய இடங்களை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக தி.மு.க கட்சி பிரமுகர்கள் கட்சியின் தலைமையை ஒரு பக்கம் சாட, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளோ "எங்களுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை" என்று பல இடங்களில் தனித்து போட்டி காண்கின்றனர். தி.மு.க கூட்டணிக்குள்ளையே பல சம்பவங்கள் நடந்தேறி வரும் நிலையில்,


கோயம்புத்தூர் செல்வபுரம் 72வது வார்டில், தி.மு.க   வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜலட்சுமியை திரும்பபெறக்கோரி, அப்பகுதி தி.மு.க செயலாளர் மதியழகன் சார்பில் போராட்டம் வெடித்தது. "பணத்தை வாங்கிவிட்டு  வேட்பாளரை அறிவித்துவிட்டனர்" என்ற கோஷங்களும் அப் போராட்டக்களத்தில் எழுந்தது"

இப்படி கோவை தி.மு.க'வில் ஒரே பரபரப்பு தொற்றியுள்ளது.

Tags:    

Similar News