வாபஸ் வாங்கிக்கோ..! சீட் கிடைக்காத விரக்தியில் வாகனத்தின் முன்பு பாய்ந்து தி.மு.க பிரமுகரின் மனைவி எடுத்த விபரீத முடிவு!

dmk denied seat for party member

Update: 2022-02-08 00:45 GMT

வந்தவாசியில் திமுகவினரிடையே ஏற்பட்ட உள்கட்சி பூசலால், சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக பிரமுகர் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தினுள் திமுகவினரிடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனர்.

அப்போது போட்டியிட கொடுத்த வாய்ப்பு திடீரென மறுக்கப்பட்டதால் திமுக பிரமுகர் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அவ்வழியாக வந்த வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வந்தவாசியில், கெஜலட்சுமி நகரில் வசித்து வரும் மகேந்திரன், அங்கு 22ஆவது வார்டு திமுக வட்ட பிரதிநிதியாக பதவி வகித்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, வேட்பாளர் பட்டியலில் 22ஆவது வார்டு வேட்பாளராக இவரது பெயர் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. 

அதனால், நகராட்சி அலுவலகத்தில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த வார்டு, கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், வேட்பு மனுவை வாபஸ் பெறும்படியும் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாம்.

இதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் வேட்புமனுவை வாபஸ் பெறும்படி வற்புறுத்தப்பட்டார்.

இதில் ஆத்திரமடைந்த மகேந்திரனின் குடும்பத்தினர், அலுவலகத்திலிருந்து வெளியேறி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அப்போது, மகேந்திரனின் மனைவி அந்த வழியாக வந்த வாகனங்களின் முன்பாக விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காப்பாற்றினர்.

இமேஜ்: தினமணி








Tags:    

Similar News