"உனக்குத்தான் சீட்டு கழகப் பணியாற்று' என்று கூறி கழுத்தறுத்துவிட்டார் தி.மு.க அமைச்சர்"- 30 ஆண்டுகளாக திமுகவிற்கு உழைத்த "மும்தாஜ்" என்ற பெண் பிரமுகர் கோபம்!
" 'யவருக்கும் கொடுக்கப் போவதில்லை, உனக்குத்தான் சீட்டு! கழகப் பணியாற்று' என்று ஆசை வார்த்தைகள் கூறி, தற்பொழுது எனக்கு தி.மு.க போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை" என்று தி.மு.க பெண் பிரமுகர் மும்தாஜ் வெளியிட்ட காணொளி தி.மு.க'வின் உண்மை முகத்தை உலகறிய செய்து வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகங்களை அமைத்து களம் இறங்கி விட்டனர். ஆனால் ஆளும் தி.மு.க'வில் மட்டும் மிகப் பெரிய சலசலப்பு எல்லா இடங்களிலும் நீடித்து வருகிறது. "தகுதியானவர்களுக்கும், கழகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது" என்று தி.மு.க கட்சிக்குள்ளையே பரவலாக குற்றச்சாட்டு இருந்தவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில், இருப்பவர் "மும்தாஜ்" என்ற திமுக பெண் பிரமுகர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க'விற்கு உழைத்து வருகிறார்.
எதிர் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினராக போட்டியிட கட்சியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது விருப்பம் நிராகரிக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மும்தாஜ், தி.மு.க'வை கடுமையாக சாடி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது : 'யவருக்கும் கொடுக்கப் போவதில்லை, உனக்குத்தான் சீட்டு! கழகப் பணியாற்று' என்று நம்பகரமாக சொல்லிவிட்டு, 'இன்று உனக்கு சீட் இல்லை' என்றுக் கூறி என் கழுத்தை அறுத்து விட்டார் நமது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள்.
இப்படி கட்சிக்குள்ளேயே பல அதிருப்திகளை சம்பாதிக்கும் தி.மு.க, எதிர் வரக்கூடிய தேர்தலை எப்படி சமாளிக்கும் என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது.