2,600 வீடுகள், 700 கால்நடைகள் பலி !கடலூரை புரட்டி போட்ட வெள்ள பாதிப்பு - கைகட்டி நிற்கும் தி.மு.க !
கடலூரை புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் 2600 வீடுகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதில் குறிப்பாக அதிக பாதிப்பாக ஊடகங்களில் சென்னை மாநகரம் காண்பிக்கப்பட்டாலும் அதிகம் கவரப்படாமல் பாதிக்கப்பட்ட பகுதி என கடலூர் மாவட்டத்தை கூறலாம்.
கடலூர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக, நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்ததால் மக்கற் வாழும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
இதனால் அங்கு வசிப்போரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக 2 ஆயிரத்து 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், 700'க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி வெள்ள பாதிப்பு அதிகமாகி மக்கள் அவதிப்படுவது ஆளும் தி.மு.க அரசின் காதுகளுக்கு எட்டவில்லை என மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.