தா.மோ அன்பரசனின் ஜாதிய பாகுபாட்டால், வாய்ப்பில்லாமல் போன தி.மு.க பிரமுகர்! சுயேட்சையாக போட்டி !
"உறுப்பினரே இல்லை ஆனால் அவருக்கு சீட் " - தேர்தலில் போட்டியிட தி.மு.க வாய்ப்பளிக்காததால் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த தாம்பரம் தி.மு.க பிரமுகரின் குமுறல் இது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகங்களை அமைத்து களம் இறங்கி விட்டனர். ஆனால் ஆளும் தி.மு.க'வில் மட்டும் மிகப் பெரிய சலசலப்பு எல்லா இடங்களிலும் நீடித்து வருகிறது. "தகுதியானவர்களுக்கும், கழகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது" என்று தி.மு.க கட்சிக்குள்ளையே பரவலாக குற்றச்சாட்டு இருந்தவருகிறது.
இந்நிலையில், தாம்பரம் பகுதியில் வட்டச் செயலாளராக இருந்த தி.மு.க பிரமுகருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அவர் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
தாம்பரம் பகுதி 12வது வார்டு வட்ட கழக செயலாளராக 25 வருடமாக இருக்கும் கலைவாணன் என்பவர். 47 வது வார்டில் போட்டியிட கட்சியிடம் விருப்ப மனு அளித்துள்ளார்.
ஆனால் கலைவாணன் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கட்சியில் உறுப்பினரே இல்லாத புதியவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கலைவாணர் அவர்களே கூறுகையில்: புதிதாக வந்தவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டார்கள், உறுப்பினராகவே இல்லை அவருக்கு சீட், ஜாதிய அடிப்படையில் என்னை மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன் வெளியேற்றி விட்டார்.