முதலமைச்சர் தொகுதியில், வாக்காளர்களுக்கு தி.மு.க'வினர் வித்யாசமான முறையில் பணப்பட்டுவாடா !
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில், தி.மு.க'வினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை அளித்தனர்.
பல இடங்களில் தி.மு.க'வினர் தேர்தல் அத்துமீறல்களில் ஈடுபட்டதால் இத்தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் சொந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில். தி.மு.க'வினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் அறுபத்தி நான்காவது வார்டு தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் நாகராஜ் என்பவர், காலை முதலே வாக்காளர்களை அவரது சொந்த வாகனத்தில் வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்வதாகவும் அப்போது பணப்பட்டுவாடா நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்செய்தி அறிந்த அ.தி.மு.க'வினர் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.