தமிழக அரசு வெளியிட்ட செய்தி அறிவிப்புகளில் இந்தி மொழி! முடிவுக்கு வரும் தி.மு.க'வின் மொழி அரசியல்!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி அறிவிப்பு இந்தி மொழியில் வெளியிட்டுருப்பதால், தி.மு.க அரசு மும்மொழி கொள்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்தியாவில் மொழி அரசியலில் பெரும் ஆதாயம் கண்ட கட்சி எது என்று கேட்டால் அது தி.மு.க தான். நம் நாட்டில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழியான இந்தி மொழியை, தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வளர்ந்த கட்சியே தி.மு.க.
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கல்விக் கொள்கையை, தற்போது தி.மு.க தீவிரமாக எதிர்த்து வருகிறது. தன் கொள்கையில் இந்தி எதிர்ப்பை அடிநாதமாக கொண்ட தி.மு.க தற்போது திசை மாறிவிட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில், நேற்று ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தன் சமூகவலைதளத்தில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ செய்தியை அறிவிக்கும் விதமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் செய்திகளை வெளியிட்டது.
இச்சம்பவம் தீவிர திராவிட இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க மொழி அரசியலில் ஏன் இந்த நாடகம் ஆட வேண்டும்?? என்று பொதுமக்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.