எழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவிற்கு தகுதி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பளீர்.!

எழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவிற்கு தகுதி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பளீர்.!

Update: 2020-11-09 18:00 GMT

அ.தி.மு.க அமைச்சர்களில் சிலரே தி.மு.கவிற்கு சரிநிகராக தைரியமாக கருத்துக்களை கூறுவர் அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமார் முக்கியமானவர். அவர் இன்று "ஏழுவர் பேர் விடுதலை குறித்து  பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை" என பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும், தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன்" எனவும் பேசினார்.

மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வரின் கடுமையான முயற்சியால் தமிழ் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. விவசாய பொருட்கள் அதிக கொள்முதல் மற்றும் விற்பனை சட்டம், ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

அதேபோல் மழைநீர் கடலில் கலப்பதை தவிர்த்து மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் சிறப்பான நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" எனவும் கூறினார். ஏழுவர் விடுதலையில் தி.மு.க'வின் கள்ளதனத்தை அனைவருமே உணர்ந்து விட்டனர்.

Similar News