நெல் கொள்முதல் நிலையங்களில் தி.மு.க'வினர் அட்டகாசம் - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி !

Breaking News.

Update: 2021-09-19 11:00 GMT

"தி.மு.க நிர்வாகிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது" என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "தமிழ்நாட்டில், குறிப்பாக இந்த சீசனில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப்பாசனம் மூலம் நெல் பயிரிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தி.மு.க நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன என்றும், மேலும் நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடையுள்ள 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக, பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகிறார்கள் என்றும், எனவே, அரசு உடனே தலையிட்டு வேளாண் பெருமக்கள் விற்பனைக்குக் கொண்டு வரும் நெல்மணிகள் அனைத்தையும் உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் பல நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை என்றும், டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இதனால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை விவசாயிகளின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்கவும், அதற்குத் தேவையான சாக்குப் பை, தார்ப்பாய் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் வேளாண் பெருமக்களின் உழைப்புக்குத் தக்க பலன் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்றும் இந்த தி.மு.க அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Source - Maalai malar

Tags:    

Similar News