முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்த வழக்கு!

சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி உட்பட 1500 தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-29 07:08 GMT

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைநகர், பேரூராட்சி, நகராட்சி, கிராமம் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதே போன்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


இந்நிலையில், சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி உட்பட 1500 தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டை மீறி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News