தி.மு.க'வின் கர்ப்பிணி ஊட்டச்சத்து பெட்டக ஊழல் - லஞ்ச ஒழிப்பு துறையிடம் முறையாக புகார் அளித்த பா.ஜ.க

கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய புகாரை நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை வசம் பாரதிய ஜனதா அளித்துள்ளது.

Update: 2022-06-10 05:34 GMT

கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய புகாரை நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை வசம் பாரதிய ஜனதா அளித்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தி.மு.க அரசு முறைகேடு செய்து 70 முதல் 100 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆதாரத்துடன் வெளியிட்டார். மேலும் அவர் வெளியிட்ட அன்று இதுகுறித்து புகார் முறையாக புகார் தெரிவிக்கவிருக்கிறோம் எனவும் கூறினார்.

இந்தநிலையில் அவர் கூறியபடி நேற்று பாரதிய ஜனதா துணைத் தலைவர் வழக்கறிஞர் பால்கனகராஜ் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று தனது புகார் மனுவுடன் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் இணைத்து வழங்கியிருக்கிறார்.

மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தப்படாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என ஏற்கனவே அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai malar

Similar News