நாலு ஷீட், க்ரில் கைப்பிடி, ஒரு மேடை மதிப்பு ஒன்னரை கோடியா ! - அடேங்கப்பா இப்படியா தி.மு.க அரசு ஏப்பம் விடும் !

Breaking News.

Update: 2021-09-14 11:30 GMT

ஒன்னரை கோடி சேலவில் ஒரு சிறிய பேருந்து நிறுத்தத்தை கட்டியதாக தி.மு.க அரசு கணக்கு காட்டிய விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

தூத்துக்குடி எம்.பி'யும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி கடந்த செப்டம்பர் 5'ம் தேதி அன்று தூத்துக்குடி மாநகராட்சியில் செயின் மேரிஸ் பள்ளி அருகில் ஒரு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் கலந்துகொண்டார். அங்கு சுமார் பத்து பயணிகள் மழை, வெயில் படாமல் நிற்கும் அளவிற்கு ஒரு பயணிகள் பேருந்து நிறுத்த இடத்தை திறந்துவைத்தனர். அங்கு திறக்கப்பட்ட கல்வெட்டில் அந்த பணியின் மதிப்பீடு 154.00 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 1.5 கோடி மதிப்பீடு.




 


அந்த பயணிகள் நிழற்குடையில் ஒரு கலர் ஷட் வேய்த கூரை, இரண்டு அடி உயரத்தில் நிற்க மேடை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிரில் கைப்பிடி என 50 லட்சம் கூட மதிப்பில்லாத கட்டுமானத்திற்கு 1.5 கோடி மதிப்பிட்டுள்ளனர், இவ்வளவிற்கும் இருக்கைகள் கூட இல்லை. அரசாங்க பணத்தை இப்படி வெளிப்படையாக தி.மு.க அரசு ஏப்பம் விடுவதற்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது.

Tags:    

Similar News