விவசாயிகள், பா.ஜ.க தொடர் போராட்டதிற்கு பிறகு பணிந்த தி.மு.க அரசு - பொங்கலுக்கு கரும்பு வழங்குவதாக அறிவிப்பு
விவசாயிகளும், பாரதிய ஜனதா கட்சியும் ஈடுபட்ட போராட்டத்தின் விளைவாக தி.மு.க அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பும் சேர்த்தும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
விவசாயிகளும், பாரதிய ஜனதா கட்சியும் ஈடுபட்ட போராட்டத்தின் விளைவாக தி.மு.க அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பும் சேர்த்தும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் பணம், அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தி.மு.க அரசு அறிவித்தது. இதனை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தை அறிவித்தார், இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'உங்களுக்காக கடன் வாங்கி விளைவித்த கரும்பை கொள்முதல் செய்யவில்லை எனில் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளோம்' என விவசாயிகள் அரசை நோக்கி கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் கரும்பு வழங்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அதன் பிறகு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 1000 ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுக்கும் நிகழ்வினை வரும் ஜனவரி 2ம் தேதிக்கு பதில் 9ம் தேதிக்கு முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் பொங்கல் பரிசுக்கான டோக்கனை கொடுக்கும் பணி ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கரும்பு ஒன்று 15 முதல் 20 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என தி.மு.க அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.