"கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை தி.மு.க அரசு மூடி மறைக்கிறது" - அமித்ஷாவிற்க்கு பறந்த கடிதம்
கோவையில் தீபாவளிக்கு முன்தினம் குண்டு வெடித்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா'விற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கோவையில் தீபாவளிக்கு முன்தினம் குண்டு வெடித்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா'விற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'பா.ஜ.க'விற்கு ஆதரவாக யாராவது ஒரு பதிவு போட்டால் அவரை கைது செய்து பல பிரிவுகளை வழக்கு செய்யும் போலீசார் தற்கொலை தாக்குதல் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தும் அவர்கள் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றப்படும் எந்த பிரிவில் வழக்கு செய்தனர் என தெரிவிக்கவில்லை.
இன்னும் எட்டு பேர் போலீஸ் விசாரணையில் உள்ளனர் அவர்களை ஏன் கணக்கில் காட்டவில்லை யாரை காப்பாற்றுவதற்காக போலீஸ் அனைத்தையும் மூடி மறைக்கிறது? ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் தான் முதல்வர் ஒப்புக் கொள்வாரா? ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மூலம் கலவரப்பகுதியாக கொங்கு பகுதி மாற்றப்பட்டு வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக ரகசிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அதில் நடந்த சம்பவத்தை தமிழக அரசு மூடி மறைப்பதாக குறிப்பிட்டுள்ளோம்.
என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம். 2021 ஆம் ஆண்டு வரை தமிழக உளவுத்துறை மிகவும் வலிமையாக இருந்தது ஆனால் தற்பொழுது உளவுத்துறையினர் அரசியல் உளவு பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். தமிழக உளவுத்துறையில் 60% என் பெயர் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவராக உள்ளனர் தமிழக போலீசாரின் செயல்பாடு மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது' என அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது