பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 10,466 கோடி நிதி எங்கே? திமுக அரசை கண்டித்து போராட்டம்!

பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 10,466 கோடியை தி.மு.க அரசு என்ன செய்தது?

Update: 2023-03-15 03:37 GMT

பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தற்பொழுது பா.ஜ.க மூத்த தலைவர் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க மூத்த தலைவர் தடா பெரிய சாமியை தி.மு.க அரசு கைது செய்து இருப்பதை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வன்மையாக கண்டித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுகையில், மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பட்டியலின மக்களின் நலனுக்காக மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை முறையாக செலவிடப்படாமல் வேறுத்திட்டங்களுக்கு அவற்றை மாற்றி விடுகிறது திறனற்ற தி.மு.க அரசு. 


இதனை கண்டித்து கோயம்பேடு அம்பேத்கர் சிலை அருகே பா.ஜ.க பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி மற்றும் பா.ஜ.க தொண்டர்களை கைது செய்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக பட்டியல் சமூக நலத்திட்டங்களை நிறைவேற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து பட்டியல் சமூக மக்களை வஞ்சித்து தி.மு.க அரசு பல்வேறு குற்றங்களை செய்து வருகிறது. அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.


மேலும் பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய 10, 466 கோடி நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பிய தி.மு.க அரசை கண்டித்து கோயம்பேடு டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு பட்டியல் அணி சார்பில் போராட்டம் செய்ய முயன்று பொழுது அவர்களை காவல் துறையினர் கொண்டு கைது செய்து அடக்கி இருக்கிறது தி.மு.க அரசு.

Input & Image courtesy: Mediyaan

Tags:    

Similar News