இந்த வார ஆரம்பத்தில், தி.மு.க அரசு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு சிவன் கோயிலை அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறி இடித்த செய்தி பல செய்தித் தளங்களில் பகிரப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள கிள்ளை என்ற கிராமத்திற்கு சென்று அரசு நிலத்தில் இருந்ததாக கூறப்படும் சிவன் கோயில் மற்றும் சத்துணவு கூடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.
கோவில் நிலத்தை அரசு ஆக்கிரமிக்கும் போது, அரசு இடத்தில் கோவில் இருந்தால் என்ன? என்று பலரும் அரசின் இரட்டை நிலை குறித்து கேள்விகளை எழுப்பினர்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் ஒரு இளம் பெண் கீழ்க்கத்தளை என்ற இடத்தில் தண்ணீர் தேங்குவது குறித்து உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அவர் கூறுகையில், நீங்கள் தற்பொழுது கீழ்கத்தளை உபரிநீர் கால்வாயை பார்க்கிறீர்கள். இங்கு இவ்வளவு அகலமான கால்வாய், அங்குள்ள தேவாலயத்திற்கு அருகில் மிகவும் குறுகலாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
கால்வாயின் கிட்டத்தட்ட 30 அடி இடத்தை சர்ச் ஆக்கிரமித்து உள்ளது என 2017 ஆம் ஆண்டிலேயே இது குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா குறித்து வைத்தார். ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் தேவாலயம் அகற்றப்படவில்லை. இதனால் கால்வாய் நிரம்பி சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தயவுசெய்து தற்பொழுது தேவாலயத்தை இடித்து எங்களை காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.