அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் - தி.மு.க அரசு உத்தரவு !

twitter-grey
Update: 2021-10-29 08:00 GMT
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் -  தி.மு.க அரசு உத்தரவு !

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973, விதி 7 (3) ன்படி, அரசு பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பித்தலை அனைத்து துறை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசின் இந்த கடிதத்தை இணைத்து அனுப்பி இருக்கிறார்.

இதன்படி அரசுப்பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தி.மு.க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


Source - Maalai Malar

Tags:    

Similar News