தி.மு.கவிற்குள் கோஷ்டி பூசல்: சின்னவர், பெரியவர் இடையில் உச்சகட்ட மோதல்!
தி.மு.கவிற்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக சின்னவர் மற்றும் பெரியவர் இடையே வழுக்கும் கருத்துக்கள்.
அனைத்து கட்சிகளுக்கும் இடையில் உள் கட்சி பூசல் என்பது இருக்கின்றது. ஆனால் தற்போது காங்கிரஸில் தான் இந்த கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தில் இருக்கிறது. இதற்கு தி.மு.கவும் தற்போது விதிவிலக்கல்ல என்ற வகையில் நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலத்தில் கோஷ்டிக்கிடையே பூசல்கள் சற்று வித்தியாசமாக தான் இருந்து வருகிறது. புதுடெல்லியில் தி.மு.க எம்.பிக்கள் மத்தியில் இந்த கோஷ்டிகள் பற்றி குறிப்பிடுகையில், சின்னவர் கோஷ்டி, பெரியவர் கோஷ்டி என்று இரண்டு விதமாக அவர்கள் பெயர் சூட்டுகிறார்கள்.
இவர்களின் முதல்முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எட்டு எம்.பிக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சரான உதயநிதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கருத்து எழுந்து இருக்கிறது. இவர்கள் சின்னவர் கோஷ்டி என்று அழைக்கப் படுகிறார்கள். மேலும் ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எம். பிக்கள் தற்போது பெரியவர் கோஷ்டி என்றும் கூறப்படுகிறார்கள்.
தற்பொழுது பலத்த வாக்குவாதம் இரு கோஷ்டிகள் இடையே ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இந்த இரண்டு பிரிவுகளும் எம்.பிக்கள் மற்றும் லோக்சபாவில் தங்கள் தொகுதிக்காக என்ன செய்து வருகிறோம் என்பதை உதயநிதிக்கு நாள் தவறாமல் தெரிவித்து வருகிறார்களாம். குறிப்பாக இவர்களின் முக்கிய நோக்கம் 2024 ஆம் நடைபெறும் லோக்சபா தேர்தலில் மீண்டும் தங்களுடைய சீட் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
Input & Image courtesy: Dinamalar