காங்கிரசைப்போல் அழியும் நிலையில் திமுக, 2024தான் கடைசியே - பகீர் தகவல்கள்!

தலைவிரித்தாலும் ஊழல் மற்றும் மக்களின் அதிருப்தி காரணமாக 2014 தேர்தலில் எப்படி காங்கிரஸ் வீழ்ந்ததோ அதேபோல் 2024 தேர்தலில் திமுக மிகப் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிகிறது.

Update: 2023-01-22 08:39 GMT

தலைவிரித்தாலும் ஊழல் மற்றும் மக்களின் அதிருப்தி காரணமாக 2014 தேர்தலில் எப்படி காங்கிரஸ் வீழ்ந்ததோ அதேபோல் 2024 தேர்தலில் திமுக மிகப் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் பா.ஜ.க தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது வரும் 20204 தேர்தலில் பா.ஜ.க 350 எண்ணிக்கையில் அளவிலான எம்.பி'க்களை பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து வருகின்றன. மேலும் பாஜக குறைந்தபட்சம் 400 எண்ணிக்கையிலான எம்.பி'க்களை பெற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

பா.ஜ.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கட்சியை சேர்ந்த தலைவர்கள் முதல் பூத் ஏஜென்ட் வரை களத்தில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது, 2014 இல் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோடி இடம் காங்கிரஸ் கட்சி வீழ்ந்தது. அன்று விழுந்த காங்கிரஸ் கட்சி 9 ஆண்டுகளாக இன்று வரை எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதன் கட்சி தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் திளைத்திருக்கின்றனர், ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள பிராந்திய கட்சிகளிடம் ஒண்டிக் கொண்டு வாழும் நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது, இது போதாது என்று மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி நேரு குடும்பத்திடம் இருந்து தற்போது மல்லிகார்ஜுன கார்கே என்ற தனி நபருக்கு சென்றுவிட்டது.

ராகுல் காந்தி நடை பயணம் சென்றாலும் அவர் மதிப்பு இன்னும் கட்சிக்குள் உயரவே இல்லை எனவும் பலரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த காங்கிரஸ் ஊழலில் திளைத்ததை காரணம் எனவும் ஒவ்வொரு மாநில அளவிலான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் அந்தந்த மாநில கட்சிகள் கூட ஒட்டிக்கொண்டு இருப்பதாலும், மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் பிராந்திய கட்சிகளும் சேர்ந்து அடித்த கூட்டுக்கொள்ளையாலும் ஏற்பட்ட மக்களின் கோபமே இந்த காங்கிரஸின் தொடர் தோல்விக்கும் எழுந்திருக்க முடியாத வீழ்ச்சிக்கும் காரணம்.

இந்த நிலையில் இன்னும் 400 நாட்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் நிற்கும்? ஏற்கனவே ஜெயித்த தொகுதியாவது தக்க வைக்குமா என்ற சிக்கல் காங்கிரஸ் கட்சிக்கு எழுந்துள்ளது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கடந்த ஆட்சியில் செய்த ஊழலும், தவறுகளும்தான் காரணம். இதே போல் திமுக தற்பொழுது ஊழல், நிர்வாக சீர்கெட்டுடன் ஆட்சி செய்து வருவதால் காங்கிரசை போல் திமுக அதள பாதாளத்தில் வீழும் என தெரிகிறது.

மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 'காங்கிரஸ் கட்சி வீழ்ந்தது போல் தி.மு.க'வும் வீழும்' என கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 2009-2014 ஆம் ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் கட்சி அடித்த கொள்ளை அவ்வளவு! கொள்ளை அடித்து ஊழல் செய்து பணத்தில் திளைத்தனர்! இதனை கண்ட மக்கள் அதிருப்தி அடைந்து பாஜக பக்கம் சென்றனர், அன்று சென்ற மக்களை பாஜக தக்க வைத்துக் கொண்டது இன்று மாபெரும் சக்தியாக பாஜக வளர்ந்து நிற்கிறார்கள் காரணம் என்றால் அதற்கு காங்கிரஸ் கட்சியின் ஊழல் தான் காரணம். அதேபோல் தற்போது இந்த 20 மாத கால ஆட்சியில் திமுக ஊழலில் திளைத்து ஊறுகிறது, அதில் இருப்பவர்கள் அதிகார மமதையில் ஆடுகிறார்கள், நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை இந்திய நிலைமை நீடித்தால் 2014ல் காங்கிரஸ் எப்படி வீழ்ந்ததோ அதேபோல் 2024 ஆண்டில் திமுக கட்சி மிகப் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் பிறகு ஆயுள் முழுவதும் எழுந்திருக்கவே முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர் என பலரின் கருத்துக்களும் இதுவாக இருப்பதால் மேல் மட்ட திமுகவினர் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அடிமட்ட தொண்டன் வயிற்றில் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் தன் வளர்த்த கட்சி இப்படி பறிபோகப் போகிறது என்று!


Source - Jourlanist Mani

Similar News