ஆண்டிமுத்து ராசாவை ஒதுக்கும் தி.மு.க தலைமை - ஓவர் பேச்சு காரணமா?

தி.மு.க எம்.பி ஆண்டிமுத்து ராசாவுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-12-04 13:09 GMT

தி.மு.க எம்.பி ஆண்டிமுத்து ராசாவுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிமுத்து ராசா, முன்னாள் மத்திய அமைச்சரான இவர் தற்பொழுது நீலகிரி எம்.பி ஆகவும், தி.மு.கவில் துணை பொதுச்செயலாளராக உள்ளார். கட்சியில் தற்போது இவருக்கு போதிய முக்கியத்துவம் தரப்படாமல் புறக்கணிக்கும் வகையில் கட்சி தலைமை நடந்து கொள்வதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 29ஆம் தேதி அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இந்த விழாவில் சிதம்பரம் எம்.பி திருமாவளவன் பேசி முடித்தது அடுத்ததாக தன்னை பேச அழைப்பார் என நினைத்த ராசா இருக்கையில் இருந்து எழ முயன்றார்.

அப்போது அமைச்சர் சிவசங்கர் பேச அழைக்கப்பட்டார் இதனால் முகம் சிவந்த ராஜா வாடிய முகத்துடன் மேடையில் காணப்பட்டார். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசும் பொழுது அமைச்சர் சிவசங்கரின் செயல்பாடு குறித்து புகழ்ந்து பேசியதுடன் அமைச்சர் சிவசங்கருக்கு உறுதுணையாக ராசா செயல்பட்டதாக கூறியதால் ராசா இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை பேசி வருவதாலும் மக்கள் மத்தியில் ஆண்டி முத்து ராசா மீது அதிருப்தி இருப்பதாலும் கட்சி அவரை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பேசினால் ராசாவுக்கு உறுதுணையாக சிவசங்கர் செயல்படுகிறார் என கூறுவார்.

தற்போது அது தலைகீழாக மாறி சிவசங்கருக்கு உறுதுணையாக ராசா செயல்படுகிறார் என கூறும் நிலைக்கு வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அறிவாலயத்தின் ராசா புறக்கணிப்பை.


Source - Dinamalar 

Similar News