கனிமொழி எம்.பி கலந்த கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: தி.மு.க நிர்வாகிகள் அட்டகாசம்!
கனிமொழி எம்.பி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தி.மு.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் கனிமொழி எம்.பி அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்து இருந்தார். அப்பொழுது இந்த கூட்டத்தை இருந்த தி.மு.க நிர்வாகிகள் இரண்டு பேர், அங்கு கலந்து கொண்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள். உடனடியாக அங்கு இருந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறார். ஆனால் போலீஸ்காரர்களை அனுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தினார். குறிப்பாக அவர்கள் இருவரையும் கைது செய்யக்கூடாது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது.
இதை இப்படியே விடுங்கள் என்று கூறியிருக்கிறார். பேராசிரியர் அன்பழகன் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க எம்.பி கனிமொழி அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார். அந்த கூட்டத்தில் தான் இந்த மாதிரியான செயல் அரங்கேறி இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகியான ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகிய இருவரும் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பிற்காக பங்கேற்று இளம் பெண் காவலர்களுக்கு அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான பிறகு, அவர்கள் மீட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தி.மு.க எம்.எல்.ஏ கூறிய கருத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கூட்டத்தில் பாதுகாப்பிற்கு இன்று பெண் போலீசாருக்கு இந்த நிலைமை என்றால், தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு எந்தவொரு நிலைமை ஏற்படும்? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: J News