விடியல் ஆட்சியில் அடுத்து பேருந்து கட்டணம் உயர்வா? - அமைச்சரின் பதில் என்ன?

Update: 2021-10-23 11:30 GMT

"தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது" என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலை மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "டீசல் விலையேற்றத்தால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பேருந்துகளில் நாளொன்றுக்கு 1 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர் என்றார். டீசல் மானியம் அரசு வழங்கினாலும் தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றும், ஆனாலும் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த எண்ணமும் இல்லை" என்று அவர் கூறினார்.


டீசல் விலை ஏற்றத்தால் பயணிகள் கட்டணம் விலை ஏறும் என செய்திகள் உலாவும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பால் விலையேற்றம் தற்பொழுது இல்லை ஆனால் விரைவில் வரும் என தெரிகிறது.


Source - ASIANET NEWS

Tags:    

Similar News