பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை.. நிதியமைச்சர் திடீர் பல்டி.!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்று கூறியுள்ளார். தேர்தல் முன்புவரை ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த முன்னர் மற்றொரு பேச்சா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Update: 2021-06-20 06:20 GMT

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.




 


தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இன்றுவரை அது போன்ற அறிவிப்புகளை எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.


 



இந்நிலையில், இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்று கூறியுள்ளார். தேர்தல் முன்புவரை ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த முன்னர் மற்றொரு பேச்சா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News