எங்களுக்கு எங்கே சீட்: அமைச்சர் செந்தில் பாலாஜி காரை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்!
பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், தேர்தலில் வாய்ப்பு வழங்காத திமுகவினர் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அறங்கேறியுள்ளது.
பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், தேர்தலில் வாய்ப்பு வழங்காத திமுகவினர் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அறங்கேறியுள்ளது. கோவை மாநகராட்சியில் திமுக தொண்டர்களுக்கு சீட் வழங்காமல் அவர்களின் வாரிசுகள் மற்றும் மாவட்ட செயலாளர் உறவினர்களுக்கு மட்டுமே வார்டு உறுப்பினர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் ஆங்காங்கே கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அதே போன்று பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டத்திற்கு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் புறப்பட்டு செல்லும்போது, திமுக தொண்டர்கள் காரை மறித்து கொண்டனர். தேர்தலில் ஏன் எங்களுக்கு சீட் வழங்கவில்லை. ஒரு தரப்பினருக்கு மட்டுமே சீட் வழங்கியுள்ளனர் என திமுக தலைமைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.
இதனால் எப்படியாவது கூட்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டால் போதும் என்று செந்தில் பாலாஜி அவர்களிடம் சமாதானமாக பேசினார். ஆனால் திமுகவினர் காரை சுற்றிக் வளைத்துக்கொண்டனர். ஒரு வழியாக அங்கிருந்து திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். திமுக அமைச்சரை அவர்கள் கட்சித் தொண்டர்களே வழிமறித்து போராட்டம் நடத்திய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai