தி.மு.க'வின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியும் போச்சா? - அமைச்சர் பதில் !

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பற்றிய வாக்குறுதியாவது நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Update: 2021-08-25 15:15 GMT

தி.மு.க'வின் வாக்குறுதியான கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி எங்கே என மக்கள் கேட்கும் வேளையில் இன்று சட்டசபையில் அதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்துள்ளார்.


தி.மு.க'வின் வாக்குறுதிகளில் பெரும்பான்மை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் மக்கள் ஏமாற்றப்படும் வேளையில் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பற்றிய வாக்குறுதியாவது நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சட்டசபையில் கூறியதாவது, "தமிழ்நாடு தொழிலகக் கூட்டுறவு வங்கியில் சிறு, குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து, ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 தொழிலகக் கூட்டுறவு வங்கிகளில் இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக, மொத்தம் 45 வங்கிக் கிளைகளில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அவற்றைக் களைந்தெடுத்த பிறகு, நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News